ஈழத்தில் குறிப்பிடத்தக்க அரசியல் ஆய்வாளர்களில் ஒருவராகக் கருதப்படும் திரு.யதீந்திரா அவர்கள் தம்பலகாமம் புதுக்குடியிருபில் 1976.06.07.திகதி பிறந்தவர். தனது ஆரம்பக்கல்வியை குளக்கோட்டன் வித்தியாலயத்திலும் பின்னர் இடப்பெயர்வு காரணமாக ஆலங்கேணி மகா வித்தியாலயத்திலும் கற்று உயர்கல்வியை திருகோணமலை இராமகிருஷ்ண சங்க இந்துக் கல்லூரியில் வர்த்தகப் பிரிவில் க.பொ.த.உயர்தரம்வரை கற்றார்.
