திருகோணமலையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மருதநிலப் பிரதேசமான ஈச்சிலம்பற்றையின் மைந்தன் திரு.தம்பிராசா.தவரூபன். மூதூர் தொகுதியில் ஈச்சிலம்பற்று கோட்டத்தில் உள்ள ஶ்ரீ சண்பக மகாவித்தியாலயத்தில் கல்விபயின்ற இவர் வெளிவாரி பட்டப்படிபினை முடித்து மாவடிச்சேனை வித்தியாலயத்தில் சிலகாலம் ஆசிரியராகக் கடமைபுரிந்தவர்.
