இயற்கை வளம் செறிந்த தம்பலகாமம் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ‘மாக்கைத்திடல்’ வரலாற்றுப் பின்னணியுடன் தொடர்புடைய வாழ்விடமாகும். தம்பலகாமத்தின் வயல் நிலங்களுக்கு நீர் பாய்ச்சும் ‘குடமுருட்டி ஆறு’இத்திடலுக்கு அருகாண்மையில் ஓடுகிறது. பழமையில் இத்திடலில் ‘திருமால் கை’ என்ற விஷ்ணு கோயில் இருந்ததாகவும் இதன்காரணமாக இத்திடல் ‘
திருமால்கை’ என அழைக்கப்பட்டதாகவும் காலப்போக்கில் ‘திருமால்கை’யே மருவி ‘மாக்கைத்திடலானது’ எனவும் விசயமறிந்த பெரியோர் கூறுவர். இக்கோயிலின் அழிபாட்டிடங்கள் மண்ணில் புதையுண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.