Sunday, June 16, 2019

19.10.1876 இல் தம்பலகாமத்தில் கிராமிய நீதிமன்றம்


பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட கிராமிய நீதிமன்றம் 19.10.1876 இல் தம்பலகாமத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.(1) இந்நீதிமன்றம் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயத்திற்கு முன்னால் உள்ள மூர்க்காம்பிகை ஆலயத்தின் பின்னால் உள்ள பெரிய புளியமரத்தடியில் இருந்திருக்கிறது. மிக உயரமான அடித்தளமுள்ள இந்நீதிமன்ற கட்டிடம் இன்று முற்றாக அழிவடைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Wednesday, June 12, 2019

மறைந்துபோன திருக்கோணேச்சர வரலாற்று நூல் - பெரிய வளமைப் பத்ததி


சமூக வலைத்தளங்களின் அதீத செல்வாக்கு நிலவுகின்ற இக்காலத்தில்  இலங்கைத் தமிழர் வாழ்வில் அவர்களது பூர்வீக நிலங்கள் தொடர்பில் பிரச்சனைகள் எழும்போது அப்பிரதேச வரலாறு தொடர்பில் பல்வேறு கேள்விகள், தேடல்கள், உரையாடல்கள், கவலைகள், இயலாமை வெளிப்பாடுகள் என்பன பொதுவெளியில் எழுந்து மறைவது வழமையாகி இருக்கிறது.

Tuesday, May 28, 2019

1889 களில் கன்னியா வெந்நீரூற்றில் பிதிர்கடன் தீர்க்கும் நிகழ்வு


திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு இயற்கையான வெந்நீரூற்று கன்னியா வெந்நீரூற்று ஆகும். சைவமரபின்படி இத்தீர்த்தம் கன்னிகா என்ற தலத்தில் உருவானதால் கன்னிகைதீர்த்தம் என்றும் குமரித்தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இறந்தவர்களுக்கு பிதிர்கடன் செய்யும் இடமாக பலகாலம் புகழ்பெற்றிருந்தது இத்தீர்த்தம். 

Thursday, January 10, 2019

நூலகத்திற்கு நூல்கள் வழங்கிவைப்பு - புகைப்படங்கள்


தற்போது ஜேர்மனியில் வசிக்கும் தம்பலகாமத்தைச் சேர்ந்த திருமதி சுபாசினி சோதிலிங்கம் அவர்களால் கிறவற்குழி சிவசக்தி வித்தியாலயத்தியாலய நூலகத்திற்கு நூல்கள் வழங்கிவைக்கப்பட்டது.

Monday, December 31, 2018

மொன்றியல் திருமலை ஒன்றியத்தின் உதவி - புகைப்படங்கள்



திருகோணமலை மாவட்டத்தில் உள்ள விசேட தேவையுள்ள குழந்தைகளின் கல்வி, உளவளர்ச்சி, நுண்திறன் மேம்பாடு முதலியவற்றினை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டு இயங்கிவரும் நிறுவனம்  HOPE  ஆகும்.

Saturday, November 17, 2018

சூரனின் பின்னால் இருந்து அம்பெய்பவர் - புகைப்படங்கள்


சிறுபிராயம் முதல் பார்த்துவருகின்ற சூரன் போரினை மகனுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். நினைவுகள் பின்னோக்கி மிகவேகமாகச் சென்றிருந்தது.

சிறுவயதில் அசையாமல் நின்ற இடத்தில் நின்றபடி அம்பெறியும் கடவுளைவிட ஆரவாரமாக அங்குமிங்கும் ஆவேசத்துடன் சுற்றித் திரிந்து. துள்ளிக் குதித்து கூடியிருப்போரை உருவேற்றியபடி கடவுளுடன் சண்டை செய்யும் சூரன்மேல் அதிக ஈர்ப்பு இருந்ததில் ஆச்சரியமேதுமில்லை.

Tuesday, November 06, 2018

கழனி மலைக்காட்டில் ஒரு கோயில் - புகைப்படங்கள்


கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீகப் பிரதேசம் தம்பலகாமம். தம்பலகாமம் என்றதும் நம்நினைவுக்கு வருவது வயலும், வயல்சார்ந்த மருதநிலப் பிரதேசம்தான் என்றாலும் அதற்குச் சற்றும் குறைவில்லாத அளவில் மிக நீண்ட மலைப் பிரதேசமும், அடர்ந்த காடுகளும், இடையிடையே குறுக்கறுத்து ஓடுகின்ற ஆறுகளும், அருவிகளும், சிறு குளங்களும் கொண்டமைந்த இயற்கை வனப்பு மிக்க ஒரு பிரதேசம் தம்பலகாமத்தில் இருக்கிறது. அதன் பெயர் கழனி மலைப் பிரதேசம்.

Sunday, November 04, 2018

இயற்கை எழில் நிறைந்த செம்புவத்தைக் குளம் - புகைப்படங்கள்


உலகில் இயற்கை அன்னையின் அரவணைப்பில் அழகாகக் காட்சி தரும் இடங்களை அதிகமாகக் கொண்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று. அதில் இயற்கையும், மனிதனும் இணைந்து உருவாக்கிய அற்புதப்படைப்பு செம்புவத்தைக் குளம்.