Showing posts with label தம்பலகாமம். Show all posts
Showing posts with label தம்பலகாமம். Show all posts

Thursday, February 23, 2023

ஊர்ப்பெயர் ஆய்வோடு ஒரு பயணம்


எனது வாழ்க்கையில் எப்பொழுதும் நெடுந்தூரப் பயணங்கள் சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்து விடுவது வழக்கம். திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாண மருத்துவ பீடத்திற்கான வவுனியா ஊடான இருநூற்று நாற்பது கிலோமீற்றர் தூரப்பயணம் ஒவ்வொரு முறையும் எனக்கு ஒரு மறக்க முடியாத நிகழ்வினை மனதில் பதித்துச் சென்றிருக்கிறது. அவ்வாறான பயணம் ஒன்றிலேயே தம்பலகாமம் இடப்பெயர் ஆய்வு நூலுக்கான ஆரம்பப்புள்ளி இடப்பட்டது. 

Tuesday, February 07, 2023

தமனதோட்ட TAMANATOTA


இணையத்தில் இலங்கையின் புராதன சிங்கள இடப்பெயர்களும் அவற்றின் தமிழ் வடிவங்களும் என்ற ஆய்வுத் தொகுப்பினைப் பார்த்துக் கொண்டிருந்த போது தம்பலகாமம் தமனதோட்ட என்ற சிங்களப் பெயரினால் அழைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணமுடிந்தது.

Monday, February 06, 2023

தம்பை நகர்


தம்பலகாமத்தினை தம்பை நகர், தம்பை ஊர் எனச் சிறப்பித்துக் கூறும் வழக்கம் பதினேழாம் நூற்றாண்டு முதல் இன்றுவரை நிலைபெற்று இருப்பதை அறியக் கூடியதாக உள்ளது. தம்பை என்ற சொல் இடப்பெயராக நீண்ட காலமாக இலங்கையிலும்;, தமிழ்நாட்டிலும் வழங்கி வந்திருக்கிறது.

Wednesday, December 21, 2022

தம்பலகாமம் குடாக்கடல் - Tamblegam bay

தம்பலகாமம் குடாக்கடல் பண்டைய துறைமுகங்களில் ஒன்றாக இருந்தது. அது துறைமுகமாகச் செயற்பட்டது தொடர்பில் ஐரோப்பியர் காலத்து பதிவுகளே அதிகளவில் கிடைக்கின்றன. தம்பலகாமம் குடாக்கடலின் கப்பல்துறைக் கிராமப்பகுதியில் முன்னர் துறைமுகம் ஒன்று இருந்ததற்கான அழிபாடுகள் காணக் கிடைத்ததாக 1970 களில் கப்பல்துறைக்காட்டில் வேட்டையாடச் சென்றவர்கள் மூலமாக  அறியக்கூடியதாக இருக்கிறது. சிப்பித்திடல், முள்ளியடிப் பகுதிகள் எதிர்காலத்தில் களஆய்வு செய்யப்படுமாக இருந்தால் மேலும் பல விடயங்கள் வெளிவரக்கூடும்.

Sunday, October 09, 2022

அணிந்துரை - கலாநிதி கனகசபாபதி சரவணபவன் - தம்பலகாமம் ஊர்ப்பெயர் ஆய்வு

கலாநிதி கனகசபாபதி சரவணபவன்

இரண்டாம் உலகப் போரின் முடிவைத் தொடர்ந்து வரலாற்று எழுத்தியலிலும் மாற்றங்கள் நிகழத் தொடங்கின.  போரில் தொடர்புடைய சிற்றூர்கள், பாலங்கள், போர்க் கப்பல்கள்,  வழிபாட்டுத் தலங்கள் என இதுவரை அதிகம் பேசப்படாமல் இருந்த பல விடயங்கள்  வரலாற்று  ஆய்வாளர்களின் கவனத்தை திருப்பின.  வரலாற்றுத்துறைசாரா ஆர்வலர்களினால்  அவர்களைச் சுற்றியுள்ள இடங்கள் மிக அக்கறையோடு கவனிக்கப்பட்டது. இதுவரை பெரு வரலாறு பெற்றிருந்த முக்கியத்துவத்தை நுண் வரலாறு  பெறத் தொடங்கியது. நமது பாரம்பரிய வரலாற்றுக் கல்வியானது தேசம் என்ற ஒரு பெரும் நிலப்பரப்பின் ஆட்சியாளர்களது வாழ்க்கையை கால ஒழுங்கு நிரலில் எழுதி வரலாறாகப் போதித்துக் கொண்டிருக்கின்றது. அது ஒரு தேசத்தின் புற உருவப் படத்திற்கு நிகரானதே தவிர உள்ளடக்க விளக்கங்கள் நிறைந்தவை அல்ல. 

நூன்முகம் - பேராசிரியர் சி. பத்மநாதன் - தம்பலகாமம் ஊர்ப்பெயர் ஆய்வு


நூன்முகம்

வரலாற்றுப் பேராசிரியர் சி. பத்மநாதன்

வேந்தர்,  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.


இந்நூலின் ஆசிரியர் டாக்டர் ஜீவராஜ் பல ஆண்டுகளாக எமக்கு அறிமுகமானவர். பல்கலைக் கழகத்து மருத்துவக் கல்லூரியில் மேனாட்டு மருத்துவக் கலை பயின்று, பட்டதாரியானபின் பலவருடங்களாகத் திருகோணமலையில் உள்ள அரசினர் வைத்தியசாலைகளில் தொழில் புரிந்து வருகிறார். 

Thursday, May 07, 2020

தங்கையைக் கொல்லி வளவு - புகைப்படங்கள்


தம்பலகாமத்தின் இடப்பெயர் வரலாற்றைத் தேடி அலைந்து கொண்டிருந்த பொழுதுகளில் எனக்கு கிடைத்த மிக சுவாரஸ்யமான இடப்பெயர்களில் ஒன்று இந்த வளவின் பெயர்.

Sunday, May 03, 2020

களத்து மேட்டுப் பகிடிகள் (பகிடிவதையல்ல) - புகைப்படங்கள்


சிறுவயதில் பாடசாலை விடுமுறை நாட்களில் வயலில் குருவிக் காவலுக்காக செல்லும் வழக்கம் இருந்தது. அது வாழ்வில் என்றும் மறக்க முடியாத ஒரு பொற்காலம்.

Saturday, November 02, 2019

1854ல் களவுபோன மரகத இரத்தினம் பதித்த முக்கோணப் பதக்கம்


தம்பலகாமம் தொடர்பிலான பல்வேறு தகவல்கள் திருக்கோணாசல வைபவம் எனும் நூலின் மூலம் நமக்குக் கிடைக்கிறது. 1889 ஆம் ஆண்டளவில் திருகோணமலை திரு.வே.அகிலேசபிள்ளை அவர்களால் எழுதப்பட்டு 1950 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட திருக்கோணாசல வைபவம் எனும் இந்நூல் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயத்தில் இருந்து 1854ல் களவுபோன மரகத  இரத்தினம் பதித்த முக்கோணப் பதக்கம் பற்றிச் சொல்கிறது.

Thursday, October 17, 2019

ஆய்வு - தேசத்துக் கோயில் (தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம்)


தேசம் , நாடு தொடர்பாக பல்வேறுபட்ட விவாதங்கள் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தேசம் எனும் கோட்பாடு என்றென்றும் நிரந்தரமாக இருந்தது இல்லை. அது காலத்துக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டே வந்திருக்கிறது. இத்தகைய சூழலில் அரசியல், புவியியல், பண்பாட்டியல் சார்பாக நாடு, தேசம் என்பனவற்றை நாம் இன்று பிரித்தறிய முயன்று வருகிறோம்.

Sunday, August 18, 2019

தம்பலகாமம் ஊர்ப்பெயர் ஆய்வு


ஊரின் பெயர் தம்பலகமமா ? இல்லை தம்பலகாமமா? என்ற கேள்வி என் மனதில் எழுந்த நாளில் இருந்து இடப்பெயர்கள் மேல் ஒரு அதீத ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. நாள்தோறும் காணக்கிடைக்கும் இடப்பெயர்களின் பின்னால் எல்லாம் மனம் ஓடிக்கொண்டிருந்தது. சந்திக்கும் ஒவ்வொரு இடப்பெயரும் அதற்கே உரித்தான தனித்துவமான ஒரு நீண்ட சுவாரிசமான வரலாற்றைக் கொண்டிருந்தது. இடப்பெயர்கள் பற்றிய தொடர்ச்சியான தேடல் வரலாற்று எழுத்தியலில் அது கொண்டிருக்கும் முக்கியத்துவத்தினை உணர்த்துவதாக இருந்தது.

Thursday, July 18, 2019

1786 இல் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம் - புகைப்படங்கள்


ஒல்லாந்து ஆளுனர் Van Senden அவர்கள் 07.06.1786 புதன்கிழமை அன்று Tamblegam Pagoda ( தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம்) இற்கு விஜயம் செய்துள்ளார். அவர் பதிவு செய்திருக்கும் குறிப்பு இவ்வாலய மேலதிக ஆய்வுகளுக்கு அவசியமானவை என்ற வகையில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஆளுனரின் ஆலய தரிசனம் தொடர்பான தமிழ் மொழிபெயர்ப்பு (நன்றி காலனித்துவ திருகோணமலை - கலாநிதி கனகசபாபதி சரவணபவன்) இவ்வாறு அமைகிறது.

Monday, July 15, 2019

தேசத்துக் கோயிலில் திருவிழா - தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம்


தேசம் , நாடு தொடர்பாக பல்வேறுபட்ட விவாதங்கள் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தேசம் எனும் கோட்பாடு என்றென்றும் நிரந்தரமாக இருந்தது இல்லை. அது காலத்துக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டே வந்திருக்கிறது. இத்தகைய சூழலில் அரசியல், புவியியல், பண்பாட்டியல் சார்பாக நாடு, தேசம் என்பனவற்றை நாம் இன்று பிரித்தறிய முயன்று வருகிறோம்.

Sunday, June 16, 2019

19.10.1876 இல் தம்பலகாமத்தில் கிராமிய நீதிமன்றம்


பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட கிராமிய நீதிமன்றம் 19.10.1876 இல் தம்பலகாமத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.(1) இந்நீதிமன்றம் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயத்திற்கு முன்னால் உள்ள மூர்க்காம்பிகை ஆலயத்தின் பின்னால் உள்ள பெரிய புளியமரத்தடியில் இருந்திருக்கிறது. மிக உயரமான அடித்தளமுள்ள இந்நீதிமன்ற கட்டிடம் இன்று முற்றாக அழிவடைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Tuesday, November 06, 2018

கழனி மலைக்காட்டில் ஒரு கோயில் - புகைப்படங்கள்


கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீகப் பிரதேசம் தம்பலகாமம். தம்பலகாமம் என்றதும் நம்நினைவுக்கு வருவது வயலும், வயல்சார்ந்த மருதநிலப் பிரதேசம்தான் என்றாலும் அதற்குச் சற்றும் குறைவில்லாத அளவில் மிக நீண்ட மலைப் பிரதேசமும், அடர்ந்த காடுகளும், இடையிடையே குறுக்கறுத்து ஓடுகின்ற ஆறுகளும், அருவிகளும், சிறு குளங்களும் கொண்டமைந்த இயற்கை வனப்பு மிக்க ஒரு பிரதேசம் தம்பலகாமத்தில் இருக்கிறது. அதன் பெயர் கழனி மலைப் பிரதேசம்.

Tuesday, November 07, 2017

‘தம்பலகாமத்தில் ஒரு கல்வெட்டு’ - பேராசிரியர் சி.பத்மநாதன் 2005

தம்பலகாமம் கல்வெட்டு

பொலநறுவைக் காலத்துப் படைப்பற்று (மறைந்து போன சிலாசாசனம் ) என்னும் உபதலைப்புடன் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களால் எழுதப்பட்ட ‘தம்பலகாமத்தில்  ஒரு கல்வெட்டு’என்ற இக்கட்டுரை இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2005 ஆம் ஆண்டுக்கான புரட்டாதி மாத பண்பாடு என்ற சஞ்சிகையின் முதல் கட்டுரையாக வந்திருந்தது. வாசித்து, வாசித்து மனப்பாடம் ஆகிப்போன அந்தக் கட்டுரையின் சில பகுதிகள் கீழே.

Thursday, July 06, 2017

கழனிமலைக் காட்டின் இரகசியங்கள் - புகைப்படங்கள்


கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீகப் பிரதேசம் தம்பலகாமம். வயலும் வயல்சார்ந்த மருதநிலப் பிரதேசம்தான் அதன்சிறப்படையாளம் என்றாலும் அதற்குச் சற்றும் குறைவில்லாத அளவில் கடல், மலை, காடு, குளம் போன்ற அனைத்து வளங்களையும் தன்னகத்தே நிறைவாகக் கொண்டமைந்த இயற்கை எழில் நிறைந்த பூமி தம்பலகாமம்.

Saturday, July 01, 2017

2009 கொடியேற்ற நிகழ்வும் , நினைவுகளும் - புகைப்படங்கள்


30.06.2017 இன்று தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய கொடியேற்ற நிகழ்வு நிகழ்கிறது. ஒரு தேவைக்காக பழைய பதிவுகளைத் தேடியபோது அகப்பட்ட புகைப்படங்கள் இவை. 2009 ஆம் ஆண்டு ஆலய கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்றபோது எடுக்கப்பட்டவை.

Wednesday, February 15, 2017

அறநெறிப் பாடசாலை ஆசிரியைகளை கௌரவிக்கும் நிகழ்வு - புகைப்படங்கள்


தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியைகளை கௌரவிக்கும் நிகழ்வு புதுக்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் 09.02.2017 அன்று நடைபெற்றது. இங்கு மிகுந்த சிரமத்தின் மத்தியில் 32 ஆசிரியைகள்  அறநெறிக் கற்பித்தல் செயற்பாடுகளில் தம்மை அா்ப்பணித்து வருகின்றனர். அவர்களுக்கு அரச ஊதியமாக ஆண்டொன்றிற்கு 3000 ரூபா வழங்கப்படுகிறது.

Tuesday, November 08, 2016

தம்பலகாமம் கள்ளிமேட்டு 'நடுகல்' - புகைப்படங்கள்


பாரம்பரியம் மிக்க தமிழ் சமுகத்தின் தொல்மரபுகள் பல அறுபடாத நீட்சியுடன் பன்னெடுங்காலமாக பேணப்பட்டுவரும் கிராமம் தம்பலகாமம். கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்திருக்கும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட கிராமங்களில் இதுவுமொன்று. இலங்கையில் ஐரோப்பியரின் மேலாதிக்கம் ஏற்படுவதற்கு முன்னர் இன்றைய தம்பலகாமம், கிண்ணியா, கந்தளாய்ப் பிரதேச செயலாளர் பிரிவுகள் மூன்றையும் உள்ளடக்கிய பிரதேசம் “ தம்பலகாமப் பற்று” எனும் சுயாட்சி அதிகாரமுள்ள வன்னிச் சிற்றரசராக இருந்தது.