கோயில் திருப்பணிக்காக தங்களை முழுமையாக அர்பணித்துக் கொண்டவர்கள் தேவரடியார்கள். பண்ணிசை பாடுதல், நடனமாடுதல்,இசைக்கருவிகளை இசைத்தல் என்பன தேவரடியார்களின் முக்கிய பணி என்று கருதப்பட்டாலும் ஆலய வளாகத்தை சுத்தப்படுத்துதல், பூமாலை கட்டுதல், விளக்கெரித்தல் சில சமயம் மடப்பள்ளி வேலைகளில் உதவி செய்தல் போன்ற பல்வேறு பணிகளை தேவரடியார்கள் மேற்கொண்டார்கள்.
