Showing posts with label வரலாற்றுப் புதையல். Show all posts
Showing posts with label வரலாற்றுப் புதையல். Show all posts

Monday, November 07, 2016

" கொட்டியாரபுரப்பற்று முதுசங்கள் " - வரலாற்று நூல் வெளியீட்டு நிகழ்வு


வைத்திய கலாநிதி அருமைநாதன் ஸதீஸ்குமார் எழுதிய திருகோணமலை மாவட்டத்தின் புராதன தொன்மைகளை வெளிப்படுத்துகின்ற " கொட்டியாரபுரப்பற்று முதுசங்கள் " என்னும் வரலாற்று நூல் வெளியீட்டு நிகழ்வு 12- 11- 2௦16 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு Jesuit ஆங்கிலப் பாடசாலை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

Wednesday, October 19, 2016

கொட்டியாபுரத்து வன்னிபங்கள் - புகைப்படங்கள்

நன்றி -  Dr. அரு­மை­நாதன் ஸதீஸ்­குமார் 

இலங்கை ஐரோப்பியரின் காலணித்துவ ஆட்சியின் கீழ் செல்வதற்கு முன்னர் நாட்டின் வட பகுதியில் முழுமையாக வளர்ச்சியடைந்த யாழ்ப்பாண இராட்சியமும், அடங்காப்பற்று (வன்னி), திருகோணமலைப் பிரதேசம், மட்டக்களப்பு தேசம், புத்தளம், சிலாபம் ஆகிய பிரதேசங்களில் சுயாட்சி அதிகாரம் கொண்ட தமிழ் வன்னிபங்களால் ஆளப்பட்ட சிற்றரசுகளும் காணப்பட்டன. இதில் யாழ்ப்பாண இராட்சியம் தவிர்ந்த அனைத்தும் வன்னி அரசுகள் என அழைக்கப்பட்டன.

Saturday, May 07, 2016

இன்றைய வீரகேசரி (07.05.2016 ) சங்கமம் பகுதியில் எனது நேர்காணல்... நன்றி திரு.சஞ்சீவன்



01.உங்களைப் பற்றியும் உங்களது இலக்கியப்பின்ணணி பற்றியும் கூறமுடியுமா ?

தம்பலகாமத்தில் பிறந்து தற்போது திருகோணமலையில் வசித்துவரும் நான் மருத்துவராகப் பணிபுரிகிறேன். எழுத்தாளராகவும், நீண்டகாலமாக வீரகேசரி நாளிதழின் நிருபராகவும் கடமையாற்றி மறைந்தவர் எனது அப்பப்பா தம்பலகாமம் க. வேலாயுதம் அவர்கள். அவரது தூண்டுதலினால் சிறுவயதில் வாசிப்பதிலும் பின்னர் எழுதுவதிலும் ஆர்வம் ஏற்பட்டது. தந்தை கலாபூசணம் வே. தங்கராசா அவர்களின் உறுதுணையுடன் அது இன்றுவரை தொடர்கிறது. பாடசாலைக் காலத்தில் போட்டி நிகழ்ச்சிகளுடன் ஆரம்பித்த எழுத்துலகப் பயணம் பின்னர் பத்திரிகைகள், சஞ்சிகைகள், இலக்கிய மலர்கள் என்று நீண்டு செல்கிறது. 

Tuesday, April 19, 2016

1960 களில் திருகோணமலை நகரத் திருக்கோவில்கள் - புகைப்படங்கள்


திருக்கோணேச்சர ஆலய கும்பாபிஷேக மலரில் (03.04.1963) வெளிவந்த   திருகோணமலை நகரத் திருக்கோவில்களின் புகைப்படங்கள் இவை. இப் புகைப்படங்களுக்குச் சொந்தக்காரர் திருகோணமலையின் வரலாற்றை நிழற்படங்களின் துணைகொண்டு பதிவு செய்த அமரர் நாகராஜா கணபதிப்பிள்ளை அவர்கள்.

Thursday, May 28, 2015

1900 ஆம் ஆண்டு திருகோணமலை கடற்படைத் தளம் - புகைப்படங்கள்


இலங்கையில் உள்ள பெரிய  கடற்படைத்தளமான திருகோணமலை கடற்படைத் தளம் (Sri Lanka Navy (SLN) Dockyard) பிரித்தானிய ஆட்சியின் கீழ்   Royal Naval Dockyard ஆக இருந்த 1900 ஆம் ஆண்டு புகைப்படங்கள்.

Wednesday, April 01, 2015

ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வரலாற்றுப் பொக்கிசங்கள் - புகைப்படங்கள்


திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா  சிறப்புற இடம்பெற்று வருகிறது. திருகோணமலை நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இவ்வாலயம் ஈழத்திலுள்ள தொன்மையான சக்திபீடங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது. இவ்வாலயத்தின் தோற்றக்காலம் பற்றிய தரவுகள் தெளிவாக கிடைக்கவில்லையாயினும் 11ம் நூற்றாண்டில் இவ்வாலயம் சிறப்புற்று விளங்கியமைக்கான சான்றுகள் உள்ளதாக பேராசிரியர் திரு.செ.குணசிங்கம் அவர்களின் குறிப்புகளில் இருந்து தெரியவருகிறது.

Monday, March 23, 2015

கதிர்காமம் அன்றும், இன்றும் (1978) - புகைப்படங்கள்


கதிர்காமம் தென்னிலங்கையில் ஊவா மாகாணத்தில் உள்ள  திசமாறகம உப அரசாங்க அதிபர் பிரிவின்கீழ் மாணிக்க கங்கைக் கரையோரமாக அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற புனித பாதயாத்திரை தலமாகும்.

Monday, January 26, 2015

அம்மப்பாவிடம் இருந்து கிடைத்த மருத்துவ ஓலைச்சுவடிகள் (148) - PDF வடிவில்


அன்றைய நாள் ஏமாற்றம் தரும் நாளாக அமைந்திருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புடன் நாங்கள் தேடிச் சென்ற வரலாற்று மூலம் இல்லையென்றாகிப் போனதே அதற்குக் காரணமாகும். சோர்வுடன் வீட்டில் அமர்ந்திருந்தபோது மாலையுடன் சுவரில் மாட்டப்பட்டிருந்த அம்மப்பாவின் புகைப்படம் கவனத்தினை ஈர்த்தது.

Wednesday, November 19, 2014

இது குளக்கோட்டன் சமூகம் - புகைப்படங்கள்

இது குளக்கோட்டன் சமூகம்

“ஜீவா நான் ஊருக்கு வந்துவிட்டேன்” என்ற உற்சாகமான குரல் எனது அன்றைய நாளைச் சந்தோசத்துடன் தொடங்கி வைத்தது. நீண்ட நாட்களாக நான் எதிர்பார்த்திருந்த அந்தக் குரலுக்குரியவர் கலாநிதி  சரவணபவன் அவர்கள்.  திருகோணமலையின் பண்டைய வரலாற்றினை இலகுதமிழில் கால ஒழுங்குக்கு அமைய ‘வரலாற்றுத் திருகோணமலை’, ‘காலனித்துவ திருகோணமலை’ என்ற இருநூல்களை ஒழுங்குபடுத்தப்பட்ட வரலாற்று ஆவணங்களாக நமக்கு உருவாக்கித்தந்தவர். பார்ப்பதற்கும், பழகுவதற்கும் எளிமையான, இனிமையான மனிதர்.

Thursday, September 18, 2014

கப்பல்துறைக் காட்டினுள் கண்ணகி அம்மன் வழிபாடு - புகைப்படங்கள்

கண்ணகி அம்மன் வழிபாடு

திருகோணமலையில் மிகவும் பின்தங்கியதும், யுத்தத்தால் பலமுறை முழுமையாகப் பாதிக்கப்பட்டதுமான  கிராமங்களில் கப்பல்துறைக் கிராமமும் ஒன்றாகும். இது திருகோணமலைக்கும் தம்பலகாமத்திற்கும் மத்தியில் அமைந்துள்ளது. இங்குள்ள காட்டுப்பகுதியில் புராதான கண்ணகி அம்மன் வழிபாட்டு இடம் ஒன்று இருப்பதாக கப்பல்துறை இளைஞர் ஒருவர்மூலம் அறியக்கிடைத்தது.

Tuesday, June 17, 2014

வரலாற்றுப் புதையல் தேடும் பயணங்கள் - 1 - புகைப்படங்கள்



பண்டைய நாட்களில் சில செய்திகள் என்றும் அழியாமல் இருக்கவேண்டும் என அக்கால மக்கள் விரும்பினார்கள். அதனால், அவற்றைப் பல பொருட்கள் மீது எழுதி வைத்தார்கள். அவற்றில் கல்லும் ஒன்று. அவ்வாறு நீண்ட காலம் அழியாதிருக்க வேண்டும் என கல்லில் பொறிக்கப்பட்ட செய்தியே கல்வெட்டு எனப்படுகின்றது. கல்வெட்டுக்கள் பல ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கக் கூடியவை என்பதனால், மிகப்பழங்கால வரலாற்றுச் செய்திகள் மற்றும் நிகழ்வுகளுக்கான நம்பகரமான வரலாற்றுச் சான்றாதாரங்களாக அவை திகழ்கின்றன.

Wednesday, June 11, 2014

தம்பலகாமத்தின் கலை, இலக்கியப் பாரம்பரியம் - ஆவணப்படுத்தலுக்கான முன்னகர்வு

Thampalakamam


ஒரு இனம் அல்லது சமூகம் தனது இருப்பை உறுதிசெய்யவும், அதனது செழிப்பான எதிர்காலத்தை உருவாக்கவும் தனது வரலாறு, கலை,இலக்கியப் பாரம்பரியங்களை பாதுகாத்து ஆவணப்படுத்தி பரவலாக்கம் செய்வது அவசியமாகிறது.

Wednesday, April 30, 2014

மூதூர் பட்டித்திடலின் 'நவீனயுகக் கல்லாவணங்கள்' - புகைப்படங்கள்


வரலாற்றைத் தேடும் பயணங்களில் பல சுவையான நிகழ்வுகள் இடம்பெறுவதுண்டு. அவ்வாறான ஒரு சம்பவம் அண்மையில் நிகழ்ந்தது. நண்பர் வைத்தியகலாநிதி ஸதீஸ்குமார் அவர்கள் வெருகலில் தமிழர் வரலாற்றாதாரங்கள் தேடும் பயணமொன்றை ஒழுங்கு செய்திருந்தார். பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களின் 'இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் - பகுதி 2'  திருகோணமலையில் வெளியிடப்பட்ட பின்னர் அவருடன் இணைந்து இந்தப் பயணம் ஆரம்பித்தது.

Tuesday, April 22, 2014

பல்லவர்கால கலையம்சம் கொண்ட 'நாலந்த சிலை மண்டபம்' (Nalanda Gedige) - புகைப்படங்கள்

நாலந்த சிலை மண்டபம்  Nalanda Gedige

இந்தமுறை புதுவருட விடுமுறையில் பார்க்கக் கிடைத்த இடங்களில் நாலந்த சிலை மண்டபம் (Nalanda Gedige) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இலங்கை நில அளவைத் திணைக்களம் இலங்கையின் மையப்பகுதியென  ( 7.6699136N, 80.6458444E ) உறுதிப்படுத்திய இடம் இதுவாகும். A9 பிரதான வீதியில், தம்புள்ளைக்கு தெற்குப் பக்கமாக 20 கி.மீ தூரத்தில், பிரதான பதையில் இருந்து கிழக்கே 1கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த நாலந்த கெடிகே என்னும் சிலை மண்டபம்.

Thursday, April 03, 2014

திருகோணமலையில் கண்டெடுக்கப்பட்ட 'தாழி' - புகைப்படங்கள்

ஈமத்தாழி

திருகோணமலை நகராட்சி மன்ற குளக்கோட்டத்தில் கிணறு வெட்டும்போது பல ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட தாழி இதுவாகும். நீண்ட தேடல்களுக்குப் பின்னால் இப்படங்கள் கிடைக்கப்பெற்றது. எனினும் இது பற்றிய மேலதிக தகவல்கள் எதுவும் அறியக்கிடைக்கவில்லை. இத்தாழியுடன் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த மரங்களையும் படங்களில் காணக்கூடியதாக இருக்கிறது.

திருகோணமலைச் சாசனங்கள் சொல்லும் வரலாறு - 1

திருகோணமலை வரலாறு

வரலாற்றை அறிதல் என்பது வெறுமனே பழம்பெருமை பேசுவதற்காக அல்லாமல் நமது முன்னோர்களின் பண்பாட்டு விழுமியங்களை எதிர்காலச் சந்ததியினருக்கு எடுத்துச் சென்று அதனூடாக நமது சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவுவதாய் இருத்தல் வேண்டும்.

Wednesday, March 26, 2014

பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களின் 'இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் - பகுதி 2' - புகைப்படங்கள்


இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் எதிர்வரும் 04.04.2014 அன்று திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி மண்டபத்தில் காலை 9 மணிக்கு நடைபெற உள்ள புத்தக வெளியீட்டில் இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் - பகுதி 2  வெளியிடப்பட இருப்பதாக பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் தெரிவித்தார்.

Thursday, March 13, 2014

நிலாவெளியின் வரலாற்றுப்புதையல் - THE MOTHER GODDESS OF NILAAVELI - புகைப்படங்கள்

THE MOTHER GODDESS OF NILAAVELI

திருகோணமலையில் தமிழர்களின் வரலாற்று மூலங்களில் நிலாவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்தெய்வ உருவகம் குறிப்பிடத்தக்கதாகும். புதுடெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுவரும் இவ்வரிய பொக்கிசம் திருகோணமலையில் அன்னை வழிபாட்டின் தொன்மைக்கான ஆதாரமாகும். சத்திரசிகிச்சை நிபுணர் திரு.சேவியர் ( Dr.J.T.XAVIER - MBBS, FRCS ) அவர்கள் இது இந்துவெளி நாகரீக காலத்திற்கு உரியதெனக் கருதுகிறார்.