Showing posts with label விருந்தினர் பதிவு. Show all posts
Showing posts with label விருந்தினர் பதிவு. Show all posts

Tuesday, January 26, 2016

திருகோணமலை எல்லைக் காளி அம்மன் கோயில் - புகைப்படங்கள்


திருக்கோணமலை புராதன காலம் தொட்டு இன்றுவரை தனது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தால் எல்லோரையும் கவருகின்ற ஒரு நகராகும். வங்கக்கடலை நோக்கிய “ஆ” என விரிந்த குடாவோடு, நிலத்தின் அருகிலேயே கப்பல்கள் தரிக்கக்கூடிய ஆழத்தோடு திகழும் இந்த இயற்கைத்துறைமுகம் காலங்காலமாக கடலோடிகளை கவர்ந்தே வந்துள்ளது. இதனாலேயே திருக்கோணமலை அக்கால இணையற்ற தமிழ்ப்பேரரசனான இராஜராஜ சோழனது கடாரம், சொர்ணத்தீவு ( இன்றைய இந்தோனேசியா, பாலித்தீவுகள், சுமத்திரா ) போன்ற நாடுகளுக்கான படையெடுப்பிற்கான பிரதான துறைமுகமாகவும், பிற்காலத்தில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் போன்ற ஐரோப்பியரின் காலனித்துவ கனவுகளுக்கு பிரதான திறவுகோலாகவும், இக்கால அமெரிக்கா முதல் இந்தியா வரையான நாடுகளின் தீராத காதலினால் ஏற்பட்ட பல்வேறு அரசியல் சிக்கல்களுக்கு அடித்தளமாகவும் விளங்கிவருகின்றது.

Thursday, November 21, 2013

கர்மயோகி அமரர் நாகராஜா கணபதிப்பிள்ளை

நாகராஜா கணபதிப்பிள்ளை

மிக எளிமையான தோற்றம், அன்புகனிந்த வார்த்தைகள், ஆன்மீகச் சிந்தனையால் பண்பட்ட உள்ளம், கர்மயோகிகளின் சலியாத உழைப்பு என உயர்ந்த மதிப்பீட்டில் நம் மத்தியில் வாழ்ந்த நண்பர் நாகராஜா கணபதிப்பிள்ளை அவர்கள் இன்றில்லை என்ற செய்தியை ஏற்க மனம் மறுக்கின்றது. மனதைக் கனக்கச் செய்யும் அவரது பிரிவு ஏற்படுத்தியிருக்கும் வெற்றிடம் மிக விசாலமானது. அவருடைய தேவை என்றும் வேண்டும் என எண்ணிக்கொள்ளும் வகையில் அவருடைய நட்பு இருந்தது. 1970களின் பின்னர் திருகோணமலையை அடையாளப்படுத்திய மிக முக்கிய முகவரிகளில் அவரும் ஒருவராக இருந்தார்.

Wednesday, September 18, 2013

ஆலங்கேணி எனும் அற்புதக் கிராமம் - கேணிப்பித்தனின் ஞாபகமீட்டல்

ஆலங்கேணி

உப்பு நீர்ச் சிற்றாறு ஊரும் - தென்றல்
ஓடி வந்து மரஞ்செடியில் சாரும்
செப்பலியும் மீனினமும் கூடும் - ஊரி
சேர்ந்து ஊதச் சிள்வண்டும் பாடும்.

கண்ணா வேர் மூச்செறிந்து வெடிக்கும் - கேட்ட
கான் குருவி மேலெழுந்து நடிக்கும்
மண் அளைந்து நண்டு விளையாடும் - மேதி
மாவலியின் தண் கரையை நாடும்