Wednesday, October 26, 2016

கௌரிபாலனின் நூல் அறிமுகமும், கலந்துரையாடலும் - புகைப்படங்கள்


“நீங்களும் எழுதலாம்”  கவிதைச் சஞ்சிகையின் வாசகர் வட்டத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வி. கௌரிபாலனின்   காற்றில் மிதக்கும் தழும்பின் நிழல் (சிறுகதைகள்) எனும் நூலின் அறிமுகமும், கலந்துரையாடலும் 23.10.2016 அன்று ஸ்ரீ கோணேஸ்வரா இந்து கல்லூரியில் சஞ்சிகை ஆசிரியர்  திரு.தனபாலசிங்கம்  தலைமையில் இடம்பெற்றது.

Saturday, October 22, 2016

நாங்கள் விட்டில்கள் அல்ல (கவிதைத் தொகுதி) - வெளியீட்டு விழா



கவிஞர் பரம்சோதி கல்வி நிறுவனத்தின் நாங்கள் விட்டில்கள் அல்ல என்னும் கவிதைத் தொகுதியின் வெளியீட்டு விழா

Wednesday, October 19, 2016

கொட்டியாபுரத்து வன்னிபங்கள் - புகைப்படங்கள்

நன்றி -  Dr. அரு­மை­நாதன் ஸதீஸ்­குமார் 

இலங்கை ஐரோப்பியரின் காலணித்துவ ஆட்சியின் கீழ் செல்வதற்கு முன்னர் நாட்டின் வட பகுதியில் முழுமையாக வளர்ச்சியடைந்த யாழ்ப்பாண இராட்சியமும், அடங்காப்பற்று (வன்னி), திருகோணமலைப் பிரதேசம், மட்டக்களப்பு தேசம், புத்தளம், சிலாபம் ஆகிய பிரதேசங்களில் சுயாட்சி அதிகாரம் கொண்ட தமிழ் வன்னிபங்களால் ஆளப்பட்ட சிற்றரசுகளும் காணப்பட்டன. இதில் யாழ்ப்பாண இராட்சியம் தவிர்ந்த அனைத்தும் வன்னி அரசுகள் என அழைக்கப்பட்டன.

Wednesday, September 14, 2016

நண்பன் பிரதீபனின் தமிழ் தாய் மொழித் தமிழ் வாழ்த்துப் பாடல்


தம்பலகாமத்தைச் சேர்ந்த பல்துறைக் கலைஞன் திரு.பூபாலசிங்கம் பிரதீபன் எனது ஆரம்ப காலப்பாடசாலைத் தோழன். இவரது ஆற்றல், பலதுறைக் கலைத்திறண், கடின உழைப்பு,  அர்ப்பணிப்புடன் ஈடுபடும் தன்மை கண்டு பலமுறை வியந்திருக்கிறேன்.

Tuesday, July 26, 2016

தம்பை போற்றும் தலைமகனாம் தமிழறிஞன் 'பொன் சித்திரவேல்'


தம்பலகாம மக்கள் தம்மை
தன்பா லிழுத்து கல்விதனை
ஓங்கி வளர வழி செய்த
உயர்ந்த மாமனிதரிவர்
தம்பை போற்றும் தலைமகனாம்
தமிழறிஞன் பொன் சித்திரவேல்
எம்மைப் பிரிந்து சென்றனனே!
இதயம் ஏங்கித் துடிக்கிறதே!

Wednesday, July 20, 2016

நூலக ஆவணப்படுத்தலுக்கு உதவுங்கள் - www.noolaham.org


இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிப்பதோடு, தகவல் வளங்களையும், அறிவுச்சேகரங்களையும் ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்துவரும் இலாப நோக்கற்ற தன்னார்வ முயற்சி www.noolaham.orgநூலக நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டிருக்கும் ஆவணப்படுத்தலுக்குக்கான உதவிக் கோரிக்கை கீழே.