2010 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சோழர்கால கல்வெட்டுக்களைக் காண்பதற்காக கந்தளாய்ச் சிவன் கோவிலுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. தற்போது சிறியதாக அமைக்கப்பட்டிருக்கும் சிவன் ஆலயத்தில் ஒரு புராதானக் கோயிலின் சிதைந்த பாகங்களை பாதுகாத்து வருகிறார்கள் அவ்வூர் மக்கள். அவற்றில் சிவன் பார்வதி சிலை, தூண் சிதைவுகள் , ஆவுடையார் , கல்வெட்டுக்கள் என்பன அடங்குகின்றன.
Wednesday, July 19, 2017
நங்கை சானியும், எழு தேவரடியார்களும் - புகைப்படங்கள்
2010 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சோழர்கால கல்வெட்டுக்களைக் காண்பதற்காக கந்தளாய்ச் சிவன் கோவிலுக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. தற்போது சிறியதாக அமைக்கப்பட்டிருக்கும் சிவன் ஆலயத்தில் ஒரு புராதானக் கோயிலின் சிதைந்த பாகங்களை பாதுகாத்து வருகிறார்கள் அவ்வூர் மக்கள். அவற்றில் சிவன் பார்வதி சிலை, தூண் சிதைவுகள் , ஆவுடையார் , கல்வெட்டுக்கள் என்பன அடங்குகின்றன.
Wednesday, July 12, 2017
துளைகொண்ட அபூர்வ பானை கந்தளாயில் - புகைப்படங்கள்

Thursday, July 06, 2017
கழனிமலைக் காட்டின் இரகசியங்கள் - புகைப்படங்கள்
கிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீகப் பிரதேசம் தம்பலகாமம். வயலும் வயல்சார்ந்த மருதநிலப் பிரதேசம்தான் அதன்சிறப்படையாளம் என்றாலும் அதற்குச் சற்றும் குறைவில்லாத அளவில் கடல், மலை, காடு, குளம் போன்ற அனைத்து வளங்களையும் தன்னகத்தே நிறைவாகக் கொண்டமைந்த இயற்கை எழில் நிறைந்த பூமி தம்பலகாமம்.
Saturday, July 01, 2017
2009 கொடியேற்ற நிகழ்வும் , நினைவுகளும் - புகைப்படங்கள்
30.06.2017 இன்று தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலய கொடியேற்ற நிகழ்வு நிகழ்கிறது. ஒரு தேவைக்காக பழைய பதிவுகளைத் தேடியபோது அகப்பட்ட புகைப்படங்கள் இவை. 2009 ஆம் ஆண்டு ஆலய கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்றபோது எடுக்கப்பட்டவை.
Friday, May 19, 2017
மகுடம் 5 வது ஆண்டு மலர் வெளியீட்டு விழா 21-05-2017
மகுடம் 5வது ஆண்டு மலர்
(இரட்டைச் சிறப்பிதழ்)
பேராசிரியர்.சி.மெளனகுரு சிறப்பிதழ்
வெளியீட்டு விழாவும் விவரண அரங்க ஆற்றுகையும் அழைப்பிதழ்.
=================================
ஈழத்துச் சிறு சஞ்சிகை வரலாற்றில் முதன் முறையாக மகுடம் 5வது ஆண்டு மலர் பேராசிரியர்.சி.மெளனகுரு சிறப்பிதழ் இரட்டைச் சிறப்பிதழாக எதிர்வரும் 21-05-2017 ஞாயிறு மாலை 4.30 மணிக்கு மட்/ மாநகரசபை நகர மண்டபத்தில் மட்/மாநகர ஆணையாளர் திரு.வெ.தவராஜா அவர்களின் தலைமையில் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.Monday, May 15, 2017
கந்தளாய்க் குளத்து மகா வேள்வி - புகைப்படங்கள்
மழை வேண்டிப் பிராத்தனைகள் செய்யும் வழமைகள் உலகின் தொன்மையான வழிபாட்டு முறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.. பல்வேறு இன, மத, சமுகக் குழுக்களால் இவ்வழிபாடு பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Wednesday, April 26, 2017
விசேட தேவையுள்ள குழந்தைகளுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு - புகைப்படங்கள்
விசேட தேவையுள்ள குழந்தைகளின் கற்றல் ,சமூக, பொருளாதார விடையங்களை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டு திருகோணமலையில் செயற்பட்டுவரும் நிறுவனம் HOPE நிறுவனமாகும்.
Friday, April 07, 2017
கற்றலுக்கான உதவித்தொகை கையளிப்பு - புகைப்படங்கள்
1918 ஆம் ஆண்டு முதல் சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக தம்பலகாமத்தில் கல்விப்பணியாற்றிவரும் நிறுவனமாக தம்பலகாமம் ஆதி கோணேஸ்வரா மகாவித்தியாலயம் விளங்குகிறது. மிக நீண்டகாலம் இடம்பெற்று வந்த யுத்த அனர்த்தம், இடப்பெயர்வுகள், இயற்கை அழிவுகள் என்று பல்வேறுபட்ட காரணங்களால் பாதிப்புக்குள்ளானபோதும் தொடர்ந்தும் சிறப்புடன் பணியாற்றிவரும் இக்கல்விக்கூடம் சமூகத்திற்குப் பல சான்றோர்களைத் தந்திருக்கிறது.
Subscribe to:
Posts (Atom)

