Showing posts with label ஆலயம். Show all posts
Showing posts with label ஆலயம். Show all posts
Tuesday, March 24, 2015
Wednesday, March 18, 2015
Wednesday, April 23, 2014
மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் - புகைப்படங்கள்
Monday, November 04, 2013
சம்பூர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம் - புகைப்படங்கள்
சம்பூர் இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் பகழ்கொண்ட ஊர். மூதூர் நகரிலிருந்து 5 KM தொலைவில் உள்ளது இப்பிரதேசம். சம்பூர் வயல்கள் நிறைந்ததும், கடல் மற்றும் குளங்களை கொண்டதுமான அழகிய கிராமமாகும். சம்பூரண வளம் கொண்டமையால் சம்பூரணம் எனவும் பின்னர் திரிபடைந்து சம்பூர் எனவும் பெயர்பெற்றது என்றொரு கருத்துண்டு.
Friday, July 05, 2013
தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயம் - புகைப்படங்கள்
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிரதேசத்தில் பெரிதும் மக்களால் பேசப்படுகின்ற மலைக் கோயில்களில் தாந்தா மலை முருகன் ஆலயமும் ஒன்றாகும். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆலயமாக இது மக்களால் பேசப்படுகிறது. பழமையும், வரலாற்று முக்கியத்துவமும் நிறைந்த கதிர்காம முருகன் ஆலயத்துடன் தாந்தாமலை முருகன் ஆலயத்தையும் மக்கள் இணைத்துப் போற்றி வருகின்றனர்.
Tuesday, June 04, 2013
சல்லி முத்துமாரி அம்மன் ஆலயத் திருவிழா - புகைப்படங்கள்
திருகோணமலை நகரிலிருந்து வடக்கே சாம்பல்தீவு கிராமத்தில் இருக்கும் சல்லி முத்துமாரி அம்மன் கோவிலின் வருடாந்தத்திருவிழா புகைப்படங்கள்.
Monday, May 27, 2013
திருகோணமலை பாலம்போட்டாறு பத்தினி அம்மன் பொங்கல் - புகைப்படங்கள்
திருகோணமலை நகரிலிருந்து 16 கிலோமீற்றர் தூரத்தில் பாலம்போட்டாறு கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்றுச்சிறப்புமிக்க பத்தினி அம்மன் கோவிலில் இன்று ( 27.05.2013 ) வருடாந்தப் பொங்கல் விழா இடம்பெற்றது.
Thursday, October 11, 2012
உப்புவெளி அருள்மிகு சோலை வைரவர் ஆலயம் - புகைப்படங்கள்
திருகோணமலைப் பட்டணத்திலிருந்து சுமார் நாலு கிலோமீற்றர் தூரத்தில் நிலாவெளிக்குச் செல்லும் பாதையில் உப்புவெளிக் கிராம எல்லையில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
இவ்வாலயம் அமைந்துள்ள இடம் ‘சோலையடி’ என அழைக்கப்படுவதால் இவ்வாலயம் சோலை வைரவர் ஆலயம் என அழைக்கப்படுகிறது.
Wednesday, October 03, 2012
Tuesday, September 25, 2012
வெருகல் அருள்மிகு ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயம் - புகைப்படங்கள்
அமைவிடம் -வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் திருகோணமலை , மட்டக்களப்பு மாவட்டங்களின் எல்லையில் மகாவலி கங்கையின் கிளை நதியான வெருகல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
Wednesday, August 01, 2012
ஆதிகோணநாயகர் ஆலய பிரமோட்ஸப அபிஷேகம்
வரலாற்றுப்புகழ் மிக்க தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயம் பாலஸ்தானம் செய்யப்பட்டுள்ள காரணத்தால் வருடாந்த பிரமோற்ஸபம் இம்முறை இடம் பெறவில்லை.
இதற்குப்பதிலாக பிரம்மோற்ஸப தினத்தை முன்னிட்டு ஆனிமாதம் 12ஆம் நாள் செவ்வாய்க்கிழமை 26.06.2012 தொடக்கம் 16.07.2012 திங்கட்கிழமை வரை 21 தினங்களுக்கு காலை 9.00 மணிமுதல் விஷேட அபிஷேக அலங்கார பூசை என்பன நடைபெறவுள்ளது. தேர்த் திருவிழா தின அபிஷேகம் காலையிலும், கொடியிறக்க அபிஷேகம் மாலை 4.00 மணிக்கும் இடம் பெறும்.
Monday, August 30, 2010
Thursday, August 26, 2010
Tuesday, August 24, 2010
Monday, August 16, 2010
Thursday, August 12, 2010
கப்பல்துறை திருக்காளஹஸ்தீஸ்வரர் ஆலயம்
கப்பல்துறை திருகோணமலையில் இருந்து கண்டி செல்லும் வீதியில் 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. பிரதான வீதியில் இருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ள சிறிய குன்றில் அமைந்திருக்கிறது திருக்காளஹஸ்தீஸ்வரர் ஆலயம்.
Tuesday, February 02, 2010
சீதாஎலிய ஆலயம் - புகைப்படங்கள்
இராமாயண இதிகாசத்துடன் தொடர்புகொண்டதாகக் காணப்படும் இந்த ஆலயம் சிறியதாக ,நேர்த்தியானதாக இருக்கிறது. உலகில் சீதைக்கென உள்ள தனியான ஆலயம் இதுவாகும். அசோகவனத்தில் சீதை சிறைப்பட்டிருந்தமை தொடர்பில் அமைக்கப்பட்ட ஆலயமாதலால் பெரிதாக திருவிழாக்கள் கொண்டாடப்படுவதில்லை. எனினும் இங்குள்ள உழைக்கும் மக்களால் ஆலயத்தில் தைப்பொங்கல்விழா ஒவ்வொரு வருடமும் சிறப்பிக்கப்படுகிறது என அறியமுடிகிறது.
Monday, May 04, 2009
திருகோணமலை சனீஸ்வரன் ஆலய தரிசனம் புகைப்படங்கள் 2009
சனீஸ்வரன், ஒன்பது நவக்கிரகங்களில் ஒருவர். (கிரகங்கள் என்றால் பிடிப்பது என்று பொருள்) பெரும்பாலான பக்தர்களால் பயத்துடன் அணுகப்படும் கடவுள். அதே வேளை துன்பம் நேர்கையில் பக்தர்களால் நிறைய அர்ச்சிக்கப்படும் கடவுளும் இவராகத்தான் இருக்க வேண்டும். திருகோணமலையில் நிறைய ஆலயங்கள் இருந்தாலும் சனீஸ்வரனுக்கு தனியாக அமைக்கப்பட்டிருக்கும் ஆலயம் இதுவொன்றுதான். இலங்கையிலுள்ள ஒரேயொரு சனீவரன் ஆலயம் இதுவென நினைக்கிறேன். இந்தியாவிலுள்ள சனீஸ்வரனை பிரத்தியோகமாக வழிபடும் தலம் திருநள்ளாறு. நளன் சனிபகவானிடமிருந்து விடுபட்ட இடமாக கருதப்படும் இங்கு சனீஸ்வரனுக்குத் தனியான சன்னிதி உண்டு.
Thursday, April 09, 2009
ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம், புகைப்படங்கள் 2009
அமைவிடம் :- திருகோணமலை நகரின் பேரூந்து நிலையத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் எதிரே பரந்த விளையாட்டு மைதானமும், அதையடுத்து விரிந்து கிடக்கும் கடலும் இவ்வாலய சூழலின் இயற்கை அழகை மெருகூட்டுகின்றது என்றால் அது மிகையாகாது.
Tuesday, February 10, 2009
தம்பலகாமம் ஆதி கோணநாயகர் கோயில் வரலாறு
திருச்சிற்றம்பலம்
(விநாயகர் துதி)
கங்கை சூடிய கோணயங்கடவுளின் கருத்தை விட்டகலாத
மங்கை தன்னோடு தம்பலகாம மெனும் பெரும்பதியினிலமர
இங்கு மோருயர் ஆலயமமைந்த சரிதையைச் செய்யுளிற் சமைக்க
துங்கமாமுக விநாயகன் மலரடி தொழுவது நம் கடனாகும்.
(விநாயகர் துதி)
கங்கை சூடிய கோணயங்கடவுளின் கருத்தை விட்டகலாத
மங்கை தன்னோடு தம்பலகாம மெனும் பெரும்பதியினிலமர
இங்கு மோருயர் ஆலயமமைந்த சரிதையைச் செய்யுளிற் சமைக்க
துங்கமாமுக விநாயகன் மலரடி தொழுவது நம் கடனாகும்.
அவையடக்கம்
கல்வியிற் சிறந்த மேலவரியற்றும் கவிவளம் பொருள்நயமுள்ள
நல்லிசைப்பாடலால் அமைத்திடும் திறமை எனக்கில்லையாயினும் ஈசன்
வல்லமையொன்றே துணையென நம்பி வரைந்திடும் வலராற்றிலேதும்
சொற்பொருள் குற்றம் உளதெனில் பெரியோர் பொறுத்தருள் செய்திட வேண்டும்.
வல்லமையொன்றே துணையென நம்பி வரைந்திடும் வலராற்றிலேதும்
சொற்பொருள் குற்றம் உளதெனில் பெரியோர் பொறுத்தருள் செய்திட வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)


