சுவிட்சிலாந்து சொய்லியம்ற் தமிழ் மன்றத்தினால் வழங்கப்பட்ட ஒருதொகுதி விளையாட்டு உபகரணங்கள் தம்பலகாமத்திலுள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
Tuesday, July 12, 2016
Saturday, May 07, 2016
இன்றைய வீரகேசரி (07.05.2016 ) சங்கமம் பகுதியில் எனது நேர்காணல்... நன்றி திரு.சஞ்சீவன்
01.உங்களைப் பற்றியும் உங்களது இலக்கியப்பின்ணணி பற்றியும் கூறமுடியுமா ?
தம்பலகாமத்தில் பிறந்து தற்போது திருகோணமலையில் வசித்துவரும் நான் மருத்துவராகப் பணிபுரிகிறேன். எழுத்தாளராகவும், நீண்டகாலமாக வீரகேசரி நாளிதழின் நிருபராகவும் கடமையாற்றி மறைந்தவர் எனது அப்பப்பா தம்பலகாமம் க. வேலாயுதம் அவர்கள். அவரது தூண்டுதலினால் சிறுவயதில் வாசிப்பதிலும் பின்னர் எழுதுவதிலும் ஆர்வம் ஏற்பட்டது. தந்தை கலாபூசணம் வே. தங்கராசா அவர்களின் உறுதுணையுடன் அது இன்றுவரை தொடர்கிறது. பாடசாலைக் காலத்தில் போட்டி நிகழ்ச்சிகளுடன் ஆரம்பித்த எழுத்துலகப் பயணம் பின்னர் பத்திரிகைகள், சஞ்சிகைகள், இலக்கிய மலர்கள் என்று நீண்டு செல்கிறது.
Wednesday, May 04, 2016
“இலக்கியப் பூக்கள் - 2 ” - தொகுப்பாசிரியர் முல்லை அமுதன்
இங்கிலாந்தில் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தின் பிரபல எழுத்தாளர் “முல்லை அமுதன்” அவர்கள் தொகுத்தளித்திருக்கும் “இலக்கியப் பூக்கள் ” என்னும் நூலின் இரண்டாவது தொகுதி சென்னை “காந்தளகத்தின்” தயாரிப்பில் வெளிவந்திருக்கின்றது.
Thursday, April 28, 2016
Wednesday, April 27, 2016
அகஸ்தியர் ஸ்தாபன மகா கும்பாபிஷேக மலர் - புகைப்படங்கள்
திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச செயாளர் பிரிவில் (திருகோணமலைப் பட்டினத்தில் இருந்து 23 மைல் தொலைவில்) அமைந்துள்ள வரலாற்றுப் பெருமை மிக்க கங்குவேலி (திருக்கரைசையம்பதி) கிராமத்தில் மகாவலி கங்கைக் கரையில் அகஸ்தியர் ஸ்தாபனம் அமைந்திருக்கிறது. அகஸ்தியர் ஸ்தாபன மகா கும்பாபிஷேக மலர் 23.04.2016 அன்று காலை 11.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
Thursday, April 21, 2016
அகஸ்தியர் ஸ்தாபன மகா கும்பாபிஷேக மலர் வெளியீடு 23.04.2016 காலை 11.30 மணி
திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச செயாளர் பிரிவில் (திருகோணமலைப் பட்டினத்தில் இருந்து 23 மைல் தொலைவில்) அமைந்துள்ள வரலாற்றுப் பெருமை மிக்க கங்குவேலி (திருக்கரைசையம்பதி) கிராமத்தில் மகாவலி கங்கைக் கரையில் அகஸ்தியர் ஸ்தாபனம் அமைந்திருக்கிறது.
Tuesday, April 19, 2016
1960 களில் திருகோணமலை நகரத் திருக்கோவில்கள் - புகைப்படங்கள்
திருக்கோணேச்சர ஆலய கும்பாபிஷேக மலரில் (03.04.1963) வெளிவந்த திருகோணமலை நகரத் திருக்கோவில்களின் புகைப்படங்கள் இவை. இப் புகைப்படங்களுக்குச் சொந்தக்காரர் திருகோணமலையின் வரலாற்றை நிழற்படங்களின் துணைகொண்டு பதிவு செய்த அமரர் நாகராஜா கணபதிப்பிள்ளை அவர்கள்.
Subscribe to:
Posts (Atom)

