Friday, August 20, 2010

மழையில் கரையும் இதயம்

மழை பொழியும் நாளில் மனம்
மகிழ்ச்சி கொள்ளுது
மனதிலுள்ள கவலையெல்லாம்
மறைந்து போகுது

ஈரம் பட்ட மரங்களெல்லாம்
சிலிர்த்து நிக்குது
எழில் நிறைந்த பூக்களில் நம்
இதயம் தொலையுது

Thursday, August 12, 2010

கப்பல்துறை திருக்காளஹஸ்தீஸ்வரர் ஆலயம்


கப்பல்துறை திருகோணமலையில் இருந்து கண்டி செல்லும் வீதியில் 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. பிரதான வீதியில் இருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ள சிறிய குன்றில் அமைந்திருக்கிறது திருக்காளஹஸ்தீஸ்வரர் ஆலயம்.

Sunday, June 13, 2010

"ஒருங்கிணைந்த ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவை" - "Integrated Tsunami Watcher Service"



என்ற கவிதைக்கு வந்திருந்த பின்னூட்டம் தேவை கருதி பதிவாக்கப்பட்டுள்ளது. அடிக்கடி சுனாமி வருவதாக செய்திகள் வருவதுண்டு. அந்த வேளைகளில் இந்த முகவரி http://www.iibc.in/itws/ நமக்கு துணைபுரியுமென நம்புகிறேன்.. திரு.Muhammad Ismail .H, PHD, அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..

அன்புடன் ஜீவன்

பின்னூட்டம்.....

// இழப்புகள் பெரிதாய் வரும்வரை
புரிவதில்லை உயிர்இருப்புகளின் பெறுமதி //
.
நச் கவிதை மற்றும் கருத்துகள். இதில் கொடுமை என்னவென்றால் சுனாமி பற்றி 26 December 2004 -க்கு முன் இங்கு உள்ள நிறைய பேருக்கு தெரியாது. ஆதலால் யாரையும் எச்சரிக்கை செய்தி அனுப்பி உயிர், உடமைகளை காக்க முடியாமல் போனது.போதுமான கால அவகாசம் இருந்தும் இதை செய்ய இயலாமல் போனது. இதில் எங்களுக்கு அதிக குற்ற உணர்ச்சி உண்டு.
.
இப்ப நிலைமை அப்படியில்லை. செல்லிட பேசி (Cell Phone) வழியாக குறுந்தகவல் (SMS) அனுப்பி நமது இந்திய மற்றும் உலகின் கடற்கரை அருகே வசிக்கும் மக்களை காக்க நாங்கள் "ஒருங்கிணைந்த ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவை" - "Integrated Tsunami Watcher Service" யை இந்த சுனாமி தாக்குதலுக்கு பிறகு தொடர்ந்து இலவசமாக நடத்திக் கொண்டு வருகின்றோம். உண்மையில் உயிர் என்பதுதான் விலை மதிக்க முடியாத ஒன்று. மற்றவைகளுக்கு விலை உண்டு. அதன் இணையதள முகவரி http://www.iibc.in/itws/

with care and love,
Muhammad Ismail .H, PHD

Wednesday, March 24, 2010

World TB Day / சர்வதேச காசநோய் தினம்



காச நோய் மைக்கோ பக்ரீரியம் என்னும் நுண்ணங்கியால் ஏற்படும் ஓர் தொற்றுநோய். சர்வதேச காசநோய் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. மக்களிடையே காசநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 24ம் திகதி காசநோய் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. பல்லாயிரம் ஆண்டுகளாக உலகில் வாழும் இக்கிருமி பற்றிய சில விளக்கங்களை கீழுள்ள பதிவுகளில் காணலாம்.
  • இந்நோய்பற்றி அறிந்துள்ள அனைவரும் மற்றவர்களுக்கு இந்நோய்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கடப்பாடு உடையவர்களாக இருக்கிறோம். ஏனெனில் அது தொற்றும் அபாயத்தில் நாமும் இருக்கிறோம்.
செய்தி - முறையான மருத்துவம் மூலம் பூரணமாக குணப்படுத்தக் கூடிய நோய் காச நோய் - TUBERCULOSIS.

ஒன்றிணைவோம்
முயல்வோம்
சாதிப்போம்
த.ஜீவராஜ்

Tuesday, March 16, 2010

ஒரு நரபலியின் துயரக்கதை



திருகோணமலையில் இருந்து 40 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்திருக்கும் கந்தளாயில் உள்ள குளத்தினைப் பார்க்கும் சந்தர்ப்பம் அண்மையில் கிடைத்தது. பலமுறை பயணங்களின்போது பார்த்ததுதான் என்றாலும் அன்று விசேடமாக 'அம்மான் கண்' என்றழைக்கப்படும் குளக்கட்டின் ஒருபகுதியினைப் பார்க்கச் சென்றிருந்தோம்.

Friday, March 12, 2010

தமிழர் வரலாற்றின் தொன்மை சொல்லும் கந்தளாய்க் கல்வெட்டுக்கள்

கந்தளாய், திருகோணமலையில் இருந்து கண்டி செல்லும் பாதையில் நாற்பது கிலோமீற்றரில் அமைந்திருக்கும் ஊர். இலங்கையின் மிகப்பெரிய விவசாய நிலங்களைக் கொண்ட பிரதேசங்களில் ஒன்றாகக் கந்தளாயும் கருதப்படுகிறது. பண்டைய நாட்களில் கந்தளாயில் 'சதுர்வேதி மங்கலம்' என்றழைக்கப்பட்ட பிரதேசம் இருந்தது. இங்கு நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த அந்தணர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு இப்பிரதேசம் வரியில்லாமல் வழங்கப்பட்டிருக்கிறது. இங்கிருந்த குடியேற்றம் அளவில் பெரிதானதாகவும், அதிகாரம் கொண்டதாகவும் அமைந்திருந்தது என அறியமுடிகிறது.

Friday, March 05, 2010

வரலாற்றுத் திருகோணமலை


வரலாற்றுத் திருகோணமலை எனும் இந்நூல் திரு.கனகசபாபதி சரவணபவன் அவர்களால் எழுதப்பட்டது. பலசாசனங்களில் இருந்தும், வரலாற்று நூல்களில் இருந்தும் ஆதாரங்களைக்காட்டி எழுதப்பட்ட இந்நூல் திருகோணமலையின் வரலாற்றை போர்த்துக்கீசர் காலம்வரை ஆராய்கிறது.